சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எச்சரிக்கை! ஹைதராபாத்தில் வெடித்தது சர்ச்சை!  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு, உள்ளூர் வீரர்களை அணியில் தேர்ந்தெடுங்கள் இல்லையென்றால் பெயரை மாற்றி கொள்ளுங்கள் என்று  தெலங்கானா ராஷ்டிரா ஜமதி கட்சியின் எம்.எல்.ஏ தனம் நாகேந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.பி.எல் 2021 தொடருக்கான மினி ஏலம் கடந்த 18-ம் தேதி சென்னையில் நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆந்திர தெலுங்கானா மாநில வீரர்கள் இருக்கும் நிலையில் அவர்களை ஏலத்தில் எடுக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ தனம் நாகேந்தர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர்  பேசுகையில், “ ஐ.பி.எல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எங்கள் மாநிலத்தில் திறைமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அணியின் தேர்விலும், ஏலத்தின் போதும் உள்ளூர் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போக்கு தொடர்ந்தால், ஹைதராபாத்தில் கிரிக்கெட் போட்டியை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், தவறினால் எங்கள் மாநகர பெயரான ஹைதரபாத்தை அவர்கள் அணி பெயரில் இருந்து நீக்க வேண்டும், என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TRS MLA oppose SRH teamfor avoid local players


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?
Seithipunal