இந்திய கிரிக்கெட் வீரருக்கு பிரபல தமிழ் நடிகையுடன் இன்று திருமணம்!  - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மணீஷ் பாண்டே தன்னுடைய வாழ்க்கை பயணத்தில் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டார். அதிகம் வாய்ப்பு கிடைக்காத திறமையான வீரர்களில் ஒருவரான மனிஷ் பாண்டே டிசம்பர் 2 ம் தேதி மும்பையில் தென்னிந்திய நடிகையுடன் திருமணம் செய்து கொள்ள உள்ளார். பாண்டே இந்த வருடம் கர்நாடகா அணியின் கேப்டனாக விஜய் ஹசாரே டிராபி, சையத் முஷ்டாக் அலி போட்டியில் விளையாடி கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

30 வயதான மனிஷ் பாண்டேவுக்கு திருமணம், தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை அஷ்ரிதா ஷெட்டியுடன் நடைபெறுகிறது. இருவரும் காதலிப்பதாக மிக நீண்ட காலமாக வலுவான செய்திகள் வந்தன, அவர்களது திருமண செய்தி ஊடகங்களில் வெளிவந்த பின்னர் அது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

26 வயதான நடிகை அஷ்ரிதா ஷெட்டி இதற்கு முன்பு இந்திரஜித், ஓரு கன்னியும் மூனு களவாணிகளும், உதயம் என்.எச் 4 போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்போது, ​​ஆர்.பன்னீர்செல்வம் இயக்கத்தில் வரவிருக்கும் ஒரு படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது


 
மனிஷ் பாண்டேவின் திருமணம் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்கலாம் என தெரிகிறது. 

நேற்று இரவு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டியில் தமிழகத்தினை வீழ்த்தி மனிஷ் பாண்டே தலைமையிலான அணி சாம்பியன் பட்டத்தினை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 60 ரன்கள் அடித்த மனிஷ் பாண்டே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today manish pandey ashrita shetty marriage


கருத்துக் கணிப்பு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர்!
கருத்துக் கணிப்பு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர்!
Seithipunal