“ஷமி பிரச்சனையின் மூல காரணம் தேர்வுக்குழுவின் மௌனம் தான்” – ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையாக பேச்சு!
The root cause of Shami problem is the silence of the selectors Ravichandran Ashwin speaks openly
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, 2023 உலகக் கோப்பையில் காயம் இருந்தபோதும் பந்து வீசியவர்.அந்த தொடரில் இந்தியா ஃபைனல் சுற்றை அடைவதில் முக்கிய பங்காற்றியிருந்தார்.
ஆனால் அதன் பிறகு, அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் நீண்ட நாட்கள் மைதானத்திலிருந்து விலகி இருந்தார்.
அவரது மறுபிரவேசம் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் நடந்தது.
அந்தத் தொடரில் இந்தியா கோப்பையை வெல்லும் போது ஷமி தனது அனுபவத்தால் பெரும் பங்களிப்பு செய்தார்.
ஆனால் அதன் பிறகு நடந்த இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களுக்காக தேர்வுசெய்யப்படும் அணியில் அவருக்கு இடமில்லை.
தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், “ஷமி இன்னும் முழுமையாக ஃபிட்டாக இல்லை” என கூறி அவரை அணியிலிருந்து விலக்கினார்.
ஆனால் இதற்குப் பிறகு ஷமி ரஞ்சிக் கோப்பையில் விளையாடி,உத்தரகாண்டு அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்காலை வெற்றியடையச் செய்தார்.மேலும் அந்த ஆட்டத்தில் மேன் ஆஃப் த மாட்ச் விருதும் பெற்றார்.
இதனால், “நான் ரஞ்சிக் கோப்பையில் முழு ஃபிட்டாக விளையாடுகிறேன்… ஆனால் ஏன் ஒருநாள் அணியில் இடமில்லை?” எனக் கேள்வி எழுப்பினார் ஷமி.
இதற்கு பதிலளித்த அஜித் அகர்கர்,“ஷமி உண்மையிலேயே ஃபிட்டாக இருந்திருந்தால், அவர் இப்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியின் விமானத்தில் இருந்திருப்பார்” எனக் கூறினார்.
அதற்கு ஷமி மறுமொழியாக,“என்னுடைய ஃபிட்னஸ் நிலைமை பற்றி சந்தேகமா? ரஞ்சி ஆட்டத்தில் 11 மெய்டன்களும், 7 விக்கெட்டுகளும் எடுத்தது உங்களுக்கே தெரியும்!” என பதிலடி கொடுத்தார்.
இந்த விவகாரம் குறித்து இந்தியா சுழற்பந்து நாயகன் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி, இந்த பிரச்சனையின் வேரே தேர்வுக்குழுவின் மௌனமே.
அஸ்வின் கூறியதாவது:“இந்திய கிரிக்கெட்டில் எல்லாமே மறைமுக பேச்சு வழக்கில் நடக்கிறது. இது உடனடியாக மாற வேண்டும்.வீரர்களும், தேர்வுக்குழுவும் நேரடியாக உரையாடும் பழக்கம் உருவாக வேண்டும்.”
அவர் மேலும் கூறினார்:“ஷமி செய்ததைப் பாருங்கள். அவர் களத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால் ஊடகத்தில் பேசியதற்காக அவரை விமர்சிக்க முடியாது.ஏனெனில் அவரிடம் தேர்வுக்குழு எந்தத் தெளிவும் அளிக்கவில்லை.அஜித் அகர்கர் அவரிடம் விரைவில் பேசுவேன் என்று கூறியிருப்பது நல்லது.இப்போதாவது அவர் நேரடியாகப் பேசியிருப்பார் என நம்புகிறேன்.”
அஸ்வின் கூறிய இந்த கருத்துகள், இந்திய அணியின் தேர்வுக்குழு மற்றும் வீரர்களுக்கிடையிலான தொடர்பு குறைவைக் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
முகமது ஷமி போன்ற அனுபவமிக்க வீரர்களின் நிலையை நேரடியாக விளக்கி, வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க வேண்டிய நேரம் இது என கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.
English Summary
The root cause of Shami problem is the silence of the selectors Ravichandran Ashwin speaks openly