இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அஸ்வின்..? பேச்சுவார்த்தைகள் தீவிரம்..! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் கடந்த 2022-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கல்லம் ஆகியோர் இணைந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவது போல ரன் குவிப்பு முறையை டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகப்படுத்தினர்.

அதுவரை காலமும், டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஓவருக்கு 03 ரன்கள் வந்தாலே பெரிய விஷயமாக கருதப்பட்டு வந்த நிலையில், இந்த கூட்டணி கொண்டுவந்த Bazball என்ற அதிரடி முறையால் இங்கிலாந்து அணி ஓவருக்கு சராசரியாக 06 முதல் 10 ரன்கள் வரை குவித்தது.

இது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புரட்சியாக கருதப்பட்டது.  தொடக்கத்தில் இந்த முறையில் இங்கிலாந்து அணி குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றது. ஆனால் ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகள் பாரம்பரிய டெஸ்ட் முறையில் ஆடி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. 

அதாவது, இங்கிலாந்தின் Bazball என்ற அதிரடி முறைக்கு சொந்த நாட்டிலேயே எதிர்ப்பு கிளம்பியது. பெரும்பாலான ரசிகர்கள்  Bazball முறையை ரசித்தாலும், இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறாதது பெரும் விமர்சனத்தையும் முன் வைத்தனர்.

இந்த சூழலில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து பிரெண்டன் மெக்கல்லம் விலகுவதாக அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான பரிசீலனையில் இந்திய வீரர் அஸ்வினும் உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இது குறித்து சில இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளர் பணி குறித்து சில காலமாகவே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றதாகவும், இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அப்பதவிக்கு வரவேண்டி அமெரிக்காவில் சில சந்திப்புகள் நடைபெற்றதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதாவது, டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஸ்வின் கடந்த டிசம்பர் 2024-இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அஸ்வின் தனது பந்துவீச்சை தாண்டி கிரிக்கெட் அறிவுத்திறனுக்காக உலக அளவில் புகழ் பெற்றவர் ஆவார். இதன் காரணமாகவே அஸ்வின் இதற்கு முன்னர் எந்த பெரிய கிரிக்கெட் அணிக்கும் பயிற்சி அளிக்காமல் இருந்தாலும், அவரை பயிற்சியாளராக்கும் முடிவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Talks intensify over Ashwin becoming Englands Test team head coach


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->