2027 உலகக்கோப்பை தொடரில் ரோகித், கோலி விளையாடுவார்களா.. இல்லையா..? சுப்மன் கில் என்ன சொன்னார் தெரியுமா..?
Do you know what Shubman Gill said about whether Rohit and Kohli will play in the 2027 World Cup
எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணிக்காக கோப்பை வெல்லவேண்டும் என்ற இலக்குடன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மும்முரமாக பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
ஆனாலும், இருவரின் வயது 39, 37 இருப்பது அணிக்கு பிரச்னையாக அமையலாம் என்ற கேள்வி இருக்கிறது. இதில் ரோகித் சர்மா தன்னுடைய உடல் எடையை குறைத்து ஃபிட்டாக தன்னை நிரூபித்துள்ளார்.
அதேபோல விராட் கோலியும் தன்னுடைய ஃபிடன்ஸை பராமரித்து வருகிறார். ஐபில் போட்டியில் தன்னுடைய அதிரடியை காட்டியும் உள்ளார். அத்துடன், இந்திய அணியில் தனக்காக தேவை இல்லை என்ற நிலை வந்தால், அதுதான் நான் விளையாடும் கடைசி தொடராக இருக்கும் என்றும் கோலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாளை இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் சுப்மன் கில், விராட் கோலி உடனான உரையாடல் குறித்தும், 2027 உலகக்கோப்பையில் அவருக்கான இடம்குறித்தும் பேசியுள்ளார்.
அதாவது, ''உண்மையில், முன்தினம் கூட, 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான எங்கள் திட்டங்கள் குறித்து நான் அவருடன் விவாதித்தேன். அணி காம்பினேசன், எந்தெந்த வீரர்கள் அணியில் இடம்பெறலாம், தற்போது அணியில் இல்லாவிட்டாலும் எந்தெந்த வீரர்கள் எங்களுக்கு முக்கியமானவர்களாக இருக்க முடியும், மேலும் ஒவ்வொரு வீரரும் அணி அமைப்பில் எந்த இடத்தில் சிறப்பாகப் பொருந்துவார்கள் என்பது பற்றி நாங்கள் பேசினோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் கோலி, ரோகித் வயது குறித்த கேள்விக்கு பதிலளித்த கில்; ''கடந்த பத்தாண்டுகளாக ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இந்திய பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக இருந்து வருகின்றனர். இருவரும் அணியின் தவிர்க்கமுடியாத பகுதியாகத் தொடர்கின்றனர். அவர்கள் அணிக்குக் கொண்டுவரும் அனுபவமும் திறமையும் வெளிப்படையாகவே மிகவும் மதிப்புமிக்கவை. கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு சூழ்நிலைகளில் அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம்'' என்று பதிலளித்துள்ளார்.
English Summary
Do you know what Shubman Gill said about whether Rohit and Kohli will play in the 2027 World Cup