''ஹார்முஸ் ஜலசந்தியில் அனைத்து சரக்குகளுக்கும் 20 சதவீதக் கட்டணம் விதிக்கப்படும்''; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு; என்ன செய்ய போகிறது ஈரான்..? - Seithipunal
Seithipunal


அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் மோதல் நிலை உருவாகியுள்ளதால் மத்திய கிழக்கில் தொடர்ந்து போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்பதாகவும், அவ்வழியாகச் செல்லும் அனைத்து சரக்குகளுக்கும் 20% கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது. பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன. 

அதே நேரம் இரு நாடுகளுக்கும் இடையில் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் மோதல் போக்கு நீடித்து வந்தது. எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்களையும் நடத்தியிருந்தது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவமும் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகுகள் மீது கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. 

இதனால் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல்  உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் என அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந் நிலையில், அவர் அறிவித்து அடுத்த சில மணிநேரங்களிலேயே இன்னொரு அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளதாவது;

''மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியைப் பாதுகாக்கும் பொறுப்பை அமெரிக்கா ஏற்கும். அதன் வழியாகச் செல்லும் அனைத்து சரக்குகளுக்கும் 20 சதவீதக் கட்டணம் விதிக்கப்படும். இந்த செயல்முறை உடனடியாகத் தொடங்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு, ஈரானுக்கு பின்னடைவாகப் ஏற்படுத்தக்கூடும். எனினும், வளைகுடாவில் மீண்டும் தொடங்கிய இராணுவ மோதல்களைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை மீதான பரஸ்பர உரிமைக் கோரிக்கைகளை இருநாடுகளும் முன்வைத்து வருகின்றன என்பதும் இங்கு  குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trump announces 20 percent tariff on all goods passing through the Strait of Hormuz


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->