ஜூலை 16-இல் முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்; தவெகவின் முதல் முழு பட்ஜெட் ஆகஸ்டில் தாக்கல்..?
Cabinet meeting to be chaired by Chief Minister Vijay on July 16
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் 118 என்ற தனிப்பெறுபான்மை கிடைக்காத காரணத்தினால் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அதனை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சர் ஆனார்.
இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தனது முதல் பட்ஜெட்டை விரைவில் தாக்கல் செய்யவுள்ளது. இந்நிலையில், வரும் 16-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அதன்படி, வரும் 16-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் நடைபெற இருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் தரப்பட்டு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தவெக அரசு அமைந்த பிறகு முதலமைச்சர் விஜய், நாள்தோறும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தச் சூழலில் வரும் 16-ஆம் தேதி கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதால், 2026 – 2027 நிதியாண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை கடந்த திமுக அரசு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், தற்போது தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தவெக தனது முதல் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Cabinet meeting to be chaired by Chief Minister Vijay on July 16