#T20WorldCup || தற்போதுவரை தகுதிபெற்ற இரு அணிகள்.! வெளியேறிய இரு அணிகள்.! ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் நிலை?  - Seithipunal
Seithipunal


டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த 17ஆம் தேதி தொடங்கி பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் சூப்பர் 12 என்று அழைக்கப்படும் கோப்பையை வெல்வதற்கான தொடரில் பங்கேற்பதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதில்,

குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்ரீலங்கா, நெதர்லாந்து, அயர்லாந்து, நமீபியா ஆகிய நான்கு அணிகளின் தற்போதைய நிலை பற்றி பாப்போம்.

முதல் அணியாக ஸ்ரீலங்கா அணி தகுதி பெற்றுவிட்டது. அதேபோல் முதல் அணியாக நெதர்லாந்து அணி வெளியேறியுள்ளது.

இரண்டாவது இடத்திற்கு தற்போது அயர்லாந்து அணிக்கும் நமீபியா அணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவி உள்ளது.

அதன்படி, இந்த இரண்டு அணிகளும் தலா ஒரு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. நாளை இந்த இரு அணி அணிகளுக்கும் இடையிலான முக்கிய ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். 


குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள நான்கு அணிகளின் தற்போதைய நிலை பற்றி பாப்போம்.

பி பிரிவில் பங்களாதேஷ் அணி, ஸ்காட்லாந்து அணி, ஓமன் அணி, பப்புவா நியூ கினியா ஆகிய 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஸ்காட்லாந்து அணி இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதே சமயத்தில் பப்புவா நியூ கினியா அணி இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைந்து டி20 உலகக் கோப்பை தொடருக்கான சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.

மேலும், இரண்டாவது இடத்துக்கு ஓமன் நாட்டு அணிக்கும், பங்களாதேஷ் அணிக்கும் இடையே கடும் போட்டியாக அமைந்துள்ளது. இந்த இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ளது. அதே சமயத்தில் ஓமன் அணி நெட் நெட் ரன் ரேட் விகிதத்தில் அதிகம் வைத்துள்ளது. பங்களாதேஷ் அணி சற்று குறைவாகவே வைத்துள்ளது.

இந்நிலையில், இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதில், (மலை 3.30 மணி) பங்களாதேஷ் அணிக்கும் vs பப்புவா நியூ கினியா அணிக்கும் இடையேயான ஆட்டம் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 

இரண்டாவது ஆட்டம் ஓமன் நாட்டு அணிக்கும் vs ஸ்காட்லாந்து அணிக்கும் இடையே இரவு ஏழு முப்பது மணி அளவில் நடக்க உள்ளது.

இந்த இரண்டு ஆட்டங்களின் முடிவுகளை பொறுத்தே குரூப் பி பிரிவில் எந்த அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் என்ற விவரம் வெளிவரும்.

அதே சமயத்தில், பங்களாதேஷ் மற்றும் ஓமன் ஆகிய இரண்டு அணிகளும் வெற்றி அல்லது தோல்வியைத் தழுவினால், இரண்டு அணிகளில் எந்த அணி அதிக நெட் ரன் ரேட் வைத்துள்ளதோ அந்த அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

அதே சமயத்தில், இந்த இரண்டு அணிகளில் ஏதேனும் ஒரு அணி தோல்வி அடைந்தால், உதாரணத்துக்கு  பங்களாதேஷ் அணி தோல்வி அடைந்து, ஓமன் அணி வெற்றி பெறும் பட்சத்தில், ஓமன் அணி சூப்பர் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். பங்களாதேஷ் அணி வெளியேறிவிடும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

t20worldcup qualify point table


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->