பாகிஸ்தானிற்கு மேலும் பின்னடைவு! இம்ரான் கான் இருந்தும் மறுத்த 10 வீரர்கள்!  - Seithipunal
Seithipunal


இலங்கை கிரிக்கெட் அணி இந்த மாதம் இறுதியில் பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று கிரிக்கெட் விளையாட ஒப்புக் கொண்டிருந்தது. அதன்படி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. செப்டம்பர் 27-ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கான அணியை தேர்வு செய்வதில் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும், இலங்கை கிரிக்கெட்  வீரர்களுக்கும் இடையே இன்னும் ஒரு ஒருமித்த கருத்து உருவாகவில்லை. 

விருப்பப்படும் வீரர்களை மட்டுமே பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் தயாராக உள்ளது என தெரியவந்துள்ளது. 2008 ஆம் ஆண்டு இலங்கை வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பிறகு ஜிம்பாபே அணி மட்டுமே மூன்று போட்டிகளில் பாகிஸ்தானில் விளையாடி உள்ளது.  மற்ற எந்த நாடும் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்ததால் அந்த நாட்டில் நடத்த வேண்டிய போட்டிகளை துபாய் போன்ற நடுநிலையான பகுதிகளில் நடத்தி வருகிறார்கள். 

இந்த நிலையில்தான் மீண்டும் பாகிஸ்தானில் கிரிக்கெட்டிற்கு புத்துயிர் கொடுக்கும் முகமாக இலங்கை கிரிக்கெட் அணி அங்கு சென்று வர ஒப்புக் கொண்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்கள் கருதி தற்போது அணியின் முன்னணி வீரர்களாக இருக்கும் லசித் மலிங்கா, மேத்யூஸ், தினேஷ் சந்திமல், திமுத் கருணரத்னே, திசாரா பெரேரா, குஷால் பெரேரா ஆகியோர் பாகிஸ்தான் அணியினருடன் விளையாடுவதற்கு தங்கள் செல்ல முடியாது என தெரிவித்து விட்டனர். 

இந்நிலையில் அதற்கு அடுத்த நிலையில் உள்ள வீரர்களை கொண்ட இலங்கை அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது இலங்கை கிரிக்கெட் வாரியம். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இலங்கை எங்களுக்கு எந்த அணியை அனுப்பினாலும் பரவாயில்லை, எங்களுக்கு தொடர் நடை பெற்றால் போதும் என்ற அளவில் அவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் வீரர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

பாகிஸ்தானில் இலங்கை வீரர்களுக்கு செய்து வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு குறித்து இன்று இலங்கை வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ஆலோசனையின் முடிவில் 10 வீரர்கள் இலங்கைக்கு செல்ல மறுத்து விட்ட நிலையில், விருப்பப்படும் வீரர்களை பாகிஸ்தானுக்கு இலங்கை அனுப்பும் என தெரிகிறது.  ஒரு கிரிக்கெட் வீரராக இருந்து தற்போது பிரதமராக இருக்கும் இம்ரான் கான் அந்த நாட்டில் எப்படியாவது சர்வதேச போட்டிகளை நடத்தி விட தீவிர முயற்சி எடுத்தும், அவருடைய முயற்சிக்கும் பாதுகாப்பு காரணங்களால் பின்னடைவு ஏற்பட்டது அந்த நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. 

இந்த அறிவிப்பினால் பாகிஸ்தானுக்கு இரண்டாவது மூன்றாவது தர அணியை தான் இலங்கை அனுப்பும் என தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lankan players not like to go Pakistan for play cricket


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal