#WorldCup2023 || நெதர்லாந்து அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 13 வது ஐசிசி ஒரு நாள் போட்டி உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர்கான போட்டி அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடரானது நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அக்டோபர்5ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில் மீதமுள்ள 2 அணிகளை தேர்வு செய்யும் தகுதி சுற்று போட்டி ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது.

அதன்படி சூப்பர் சிக்ஸ் தகுதிச்சுற்று போட்டிக்கு இலங்கை, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி நெதர்லாந்து அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் விழித்தியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் பெரும்பாலான வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். தனஞ்ஜெய டி செல்வா மட்டும் நிலைத்து களத்தில் நின்று 111 பண்புகளில் 93 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்ததால் இலங்கை அணி 47.4 ஓவரில் 213 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை தொடர்ந்து 214 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியில் வெஸ்லி பெர்ரஸி 52 ரன்களும், ஸ்காட் எட்வர்ட் 67 ரன்களும் எடுக்க மற்ற 8 வீரர்கள் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர். இதில் 4 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து வெளியேறினர். இதனால் நெதர்லாந்து அணி 40 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. இன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணி மீதமுள்ள 2 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lanka defeated Netherlands by 21 runs


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->