சென்னையில் இன்று தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி தொடக்கம்! - Seithipunal
Seithipunal


தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி இன்று முதல் வருகிற 13-ம் தேதி வரை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு தடகள சங்கம் இந்திய தடகள கூட்டமைப்பின் ஆதரவுடன் இந்த போட்டியை  நடத்துகிறது. மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.
 
இந்த தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி தொடரில் இந்தியா (62 பேர்), பாகிஸ்தான் (12 பேர்), இலங்கை (54 பேர்), நேபாளம் (9 பேர்), வங்கதேசம் (16 பேர்), பூட்டான் (5 பேர்), மாலத்தீவுகள் (15 பேர்) ஆகிய 7 நாடுகளில் இருந்து மொத்தம் 173 வீரர்கள் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், 200 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம்,  உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டம் உள்பட 28 வகையான போட்டிகள்  இரு பாலருக்கும் நடத்தப்படுகிறது. சென்னையில் 1995-ம் ஆண்டிற்கு பிறகுஅரங்கேறும் முதல் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டி இது தான். தினசரி மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை போட்டிகள் நடைபெறும்.

இந்த தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி தொடரில், இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் வருண் ஊரி மனோகர் (100 மீட்டர் ஓட்டம்), ஜிதின் அர்ஜுனன் (நீளம் தாண்டுதல்), அரிஹரன் கதிரவன் (110 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம்), லக் ஷன்யா (நீளம் தாண்டுதல்), பிரதிக் ஷா யமுனா (நீளம் தாண்டுதல், டிரிப்பிள் ஜம்ப்), ரவி பிரகாஷ் (டிரிப்பிள் ஜம்ப்), கார்த்திகேயன் (4 x100 மீட்டர் தொடர் ஓட்டம்), அபிநயா ராஜராஜன் (100 மீட்டர் ஓட்டம்), கனிஸ்டா டீனா (4x 400 மீட்டர் தொடர் ஓட்டம்) ஆகிய 9 வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் இடம் பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து இந்தியா அதிக பதக்கங்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Asian Junior Athletics Championship starts today in Chennai


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->