இன்னும் 20 நாட்களில், இந்திய அணியின் கேப்டனாகிறார் சச்சின்! ஷேவாக், ஜாஹீர், யுவராஜ் களமிறங்குகிறார்கள்! உலகின் 5 அணிகள் பங்கேற்கும் மாபெரும் கிரிக்கெட் தொடர்!  - Seithipunal
Seithipunal


சாலைப்பாதுகாப்பு உலக சீரிஸ் தொடருக்காக இந்தியா, ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள், இலங்கை, தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணிகள் நீண்ட தொடரில் விளையாடுகிறது.  மொத்தம் 5 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 11 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. 

இதில் இந்திய லெஜண்ட்ஸ் அணிக்குக் கேப்டன் சச்சின் டெண்டுல்கர், மே.இ.தீவுகள் லெஜண்ட்ஸ் அணிக்கு லாரா கேப்டன்,  ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணிக்குக் கேப்டன் பிரட் லீ, தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணிக்குக் கேப்டன் ஜான்டி ரோட்ஸ், இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்குக் கேப்டன் தில்ஷான் என நியமிக்கப்ட்டுள்ளார்கள்.

இந்திய லெஜண்ட்ஸ் - மே.இ.தீவுகள் லெஜண்ட்ஸ் மோதும் தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் 7 முதல் நடைபெறுகிறது. மொத்தம் 11 டி20 போட்டிகளில் வான்கடேயில் 2, புனேயில் 4, நவி மும்பை பாட்டீல் ஸ்டேடியத்தில் 4, மார்ச் 22-ல் பிரபர்ன் ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 7 மணிக்குத் தொடங்கும் இதன் நேரலை கலர்ஸ் சினிபிளெக்ஸ் ஒளிபரப்பப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள், இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகளிலிருந்து முன்னாள் வீரர்கள் பலர் இந்தத் தொடரில் விளையாட உள்ளனர். 

இதில், சச்சின், சேவாக், ஜாகீர் கான், யுவராஜ் சிங், லாரா, சந்தர்பால், பிரெட்லீ, பிராட் ஹாட்ஜ், ஜாண்ட்டி ரோட்ஸ், முரளிதரன், தில்ஷான், அஜந்தா மெண்டிஸ் உட்பட பல நட்சத்திர முன்னாள் வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு லீக் போட்டியில் மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் பைனலில் விளையாடும். 

போட்டி அட்டவணை (அனைத்துப் போட்டிகளும் மாலை மணி 7 மணிக்குத் தொடங்கும்)

மார்ச் 7 : இந்திய லெஜண்ட்ஸ் - மே.இ.தீவுகள் லெஜண்ட்ஸ் (மும்பை, வான்கெடே)

மார்ச் 8: ஆஸி. லெஜண்ட் - இலங்கை லெஜண்ட்ஸ் (வான்கெடே)

மார்ச் 10: இந்தியா லெஜண்ட்ஸ் - இலங்கை லெஜண்ட்ஸ் (பாட்டீல் ஸ்டேடியம், நவி மும்பை)

மார்ச் 11: மே.இ.தீவுகள் லெஜண்ட்ஸ் - தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் ( பாட்டீல் ஸ்டேடியம்)

மார்ச் 13: தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் - இலங்கை லெஜண்ட்ஸ் ( பாட்டீல் ஸ்டேடியம்)

மார்ச் 14: இந்தியா லெஜண்ட்ஸ் - தென் ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ் ( புனே)

மார்ச் 16: ஆஸி. லெஜண்ட்ஸ் - மே.இ.தீவுகள் லெஜண்ட்ஸ் (புனே)

மார்ச் 17: மே.இ.தீவுகள் லெஜண்ட்ஸ் - இலங்கை லெஜண்ட்ஸ் (புனே)

மார்ச் 19: ஆஸி. லெஜண்ட்ஸ் - தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் (நவி மும்பை)

மார்ச் 20: இந்தியா லெஜண்ட்ஸ் - ஆஸி. லெஜண்ட்ஸ் (புனே)

மார்ச் 22: இறுதிப் போட்டி - பிரபர்ன் ஸ்டேடியம், மும்பை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Road safety world cricket series time table


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->