ஐபிஎல் போட்டிகள் வேறு நாடுகளில் நடந்தால் நன்றாக இருக்கும்.. ஆர்.சி.பி கோச் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக் (IPL) காலவரையின்றி நிறுத்தி வைத்து, பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தளர்த்தப்பட்டு பிற நாடுகளில் இந்த போட்டியை நடத்த வேண்டும் என்று சைமன் கட்ச் தெரிவித்துள்ளார். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் சாமிமன் கட்ச், லண்டன் நகரில் வைத்து நடைபெற்ற வானொலி உரையாடலின் போது இதனை தெரிவித்தார். இது தொடர்பாக வானொலியில் பேசிய சைமன் கட்ச் தெரிவித்த சமயத்தில், 

ஐ.பி.எல் போட்டிகள் வெளிநாடு நடைபெற்றால் மகிழ்ச்சியாக இருக்கும். எனது ஆர்.சி.பி அணியில் பெரும்பாலும் தென்னாபிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகளவு இருக்கின்றனர். வெளிநாட்டில் இந்த போட்டி நடனத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். ஆஸ்திரேலியா போன்று பிற நாடுகளில் இது நடந்தால் நன்றாக இருக்கும். 

எங்களின் அணியின் சார்பாக விளையாடும் அனைவரும், வெளிநாட்டில் ஐ.பி.எல் போட்டி நடைபெற்றால் சந்தோசப்படுவோம். இது நடைபெறுமா என்பதற்கு பெரிய கேள்விக்குறி வைக்கப்பட்டாலும், நடந்தால் நன்றாக இருக்கும். இது விவாதிக்கப்படலாம். ஐ.பி.எல் என்பது இந்திய பொருளாதாரம் மட்டுமல்லாது, உரிமையாளர்கள் மற்றும் பிசிசிஐ என பெரிய பொருளாதார பின்புல பக்கத்தை கொண்டுள்ளது. 

முன்னதாக வெளியான அறிவிப்புகள் படி மார்ச் 29 ஆம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கரோனா வைரஸின் காரணமாக ஊரடங்கு அமலானதை அடுத்து, ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைத்து அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் மே 3 வரையிலான ஊரடங்கு அறிவிப்பின் காரணமாக, ஐ.பி.எல் போட்டிகள் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RCB team coach Simon Katich speech about IPL


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->