கால்பந்து மைதானத்தில் கதறி அழுத நெய்மர் Jr: சொந்த மண்ணில் இப்படி ஒரு நிலைமையா..?
Neymar walks off pitch in tears as Santos embarrassed
உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்றில் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் சாண்டோஸ் அணி படு தோல்வி அடைந்துள்ளது. இதனால், பிரபல சர்வதேச நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ள நிகழ்வு வைரலாகியுள்ளது.
பிரேசில் உள்ளூர் கால்பந்து தொடரில் சாண்டோஸ் அணிக்காக நெய்மர் விளையாடி வருகிறார். இந்த தொடரில் சாண்டோஸ் அணி ,19 ஆட்டங்களில் 10 தோல்விகளை சந்தித்து பட்டியலில் 15-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் வாஸ்கோடகாமா அணியை, சாண்டோஸ் அணி எதிர்கொண்டது. குறித்த போட்டியின் இறுதியில் சாண்டோஸ் அணி 0-6 என்ற கோல் கணக்கில் வாஸ்கோ அணியிடம் பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளது.

இந்த போட்டியில் சாண்டோஸ் அணி தோல்வியடைந்த பிறகு, நெய்மர் மைதானத்திலேயே அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அவரை சகவீரர்களும், பயிற்சியாளரும் சமாதானம் செய்தபோதும் அழுதபடியே மைதானத்தை விட்டு வெளியேறிய நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், இந்த மோசமான சூழலில் அணியின் தோல்விக்காக சாண்டோஸ் அணியின் பயிற்சியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பயிற்சியாளர் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு நெய்மர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, சாண்டோஸ் அணியின் வீரர்கள் சரியாக செயல்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
English Summary
Neymar walks off pitch in tears as Santos embarrassed