மகள் திருமணத்திற்கு மறுத்ததால் விரக்தி: தந்தை தற்கொலை!
Father commits suicide due to frustration after daughter refuses to marry
மகள் திருமணத்திற்கு மறுத்து தற்கொலை முயற்சி செய்ததால் விரக்தியில் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாதவரத்தை சேர்ந்த தம்பதி ஆனந்தன், சரளா. ஆனந்தன் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆனந்தனின் மூத்த மகள் பெருங்களத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இதனிடையே, மூத்த மகளுக்கு திருமண செய்ய பெற்றோர் முடிவு செய்து நிச்சயதார்த்தம் செய்ய எற்பாடு செய்துள்ளனர். ஆனால், திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறிய ஆனந்தனின் மூத்த மகள் கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவம்னையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மகள் திருமணத்திற்கு மறுத்து தற்கொலை முயற்சி செய்ததால் மிகுந்த மன உளைச்சல் மற்றும் விரக்தியில் இருந்த ஆனந்தன் அவர் நேற்று மதியம் கொளத்தூரில் உள்ள தனது தாயார் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
அங்கு அறையில் உள்ள மின்விசிறியில் ஆனந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், ஆனந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Father commits suicide due to frustration after daughter refuses to marry