குடியரசு துணை ஜனாதிபதி தேர்வு எப்படி நடக்கும் தெரியுமா..? 'எலக்டோரல் கொலேஜ்' என்றால் என்ன..?
Do you know how the Vice Presidential election will be held
குடியரசு துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் உடல்நலக்குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து வரும் செப்டம்பர் 09-ஆம் தேதி புதிய துணை ஜனாதிபதியை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் தேஜ கூட்டணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த, மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த துணை ஜனாதிபதி தேர்தல் எப்படி நடக்கிறது..? எப்படி தேர்வு செய்யப்படுகிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, ராஜ்யசபா, லோக்சபா எம்.பி.,க்கள் ஓட்டளித்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வர். அதில், வழக்கமாக ஓட்டுகள் என்பதற்கு பதில், 'எலக்டோரல் கொலேஜ்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். ராஜ்யசபாவில் 06 காலியிடங்களை தவிர்த்து, 12 நியமன எம்.பி.,க்கள் உட்பட, 239 பேர் ஓட்டளிக்க தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.

அத்துடன், லோக்சபாவில் ஒரு காலியிடம் தவிர்த்து, 542 பேர் ஓட்டளிக்க தகுதியுடையவர்களாக இருப்பார்கள். தற்போதைய நிலவரத்தின்படி, மொத்தம் 782 பேர் ஓட்டுகள் உள்ளன. அதில் துணை ஜனாதிபதியாக வெற்றி பெறுவதற்கு 392 ஓட்டுகள் தேவையாகும்.
அப்படி பார்க்கும் போது, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு, லோக்சபாவில் 293 மற்றும் ராஜ்யசபாவில் 130 எம்.பி.,க்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணிக்கு, லோக்சபாவில் 234 மற்றும் ராஜ்யசபாவில் 79 எம்.பி.,க்கள் உள்ளனர். இதன்படி, பா.ஜ., கூட்டணிக்கு 423 எம்.பி.,க்களின் ஆதரவு உள்ளது. ஆக, அக்கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
English Summary
Do you know how the Vice Presidential election will be held