ஊரடங்கு பீதி., ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா நோய் பரவல் அதிகரித்த வண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது. இதில் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் மிக அதிகபட்சமாக நாளொன்றுக்கு 40 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று பரவல் கண்டறியப்படுகிறது.

இதற்கிடையே, கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், வரும் 9-ஆம் தேதி முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்க உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், பிசிசி வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, ஐபிஎல் போட்டிகளில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. நோயை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிசிசிஐ தீவிரப்படுத்தி உள்ளது.

பேருந்து ஓட்டுனர்கள் முதல் அனைவரும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர். விடுதிகளில் இருந்து மைதானத்திற்கு வீரர்கள் செல்வதில் எந்த இடம் இடையூறு ஏற்பட வாய்ப்பில்லை.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது போலவே தற்போது நடைபெறும் என்று பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MUMBAI IPL 2021


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->