மிரட்டும் மழை! முன்கூட்டியே தொடங்கிய போட்டி! சென்னை பேட்டிங்! இரண்டு அணியிலும் எதிர்பாராத மாற்றம்!  - Seithipunal
Seithipunal


 இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவுற்று பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று முதல் ஆரம்பம் ஆகின்றன. லீக் ஆட்டங்களில்  முதல் இரண்டு இடங்களை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முதலாவது தகுதி சுற்று போட்டியில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று விளையாடுகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த போட்டியில் தோல்வி அடையும் அணியானது அடுத்து நடைபெற உள்ள மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பிடித்த அணிகளுக்கான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே இன்றைய போட்டி நடக்குமா? நடக்காதா என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழ ஆரம்பித்து விட்டது. ஏனெனில் மதியம் முதலே தமிழகம் எங்கும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதுவரை மழை எங்கும் பொழியவில்லை என்பதால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் ஸ்டேடியத்திற்கு வந்துள்ளார்கள். 

தற்போது ஆட்டம் தொடங்கியுள்ள நிலையில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த தொடரில் சென்னை அணி மும்பை அணிக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த போட்டியில் காயமடைந்த ஜாதவ் க்கு பதில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக  துருவ் ஷோரே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முரளி விஜய்யை அனுபவ வீரர் என்ற அடிப்படியில் அணியில் எடுத்துள்ளார் தோனி. 

அதேபோல மும்பை அணியை பொறுத்தவரையில் இதுவரை இந்த தொடரில் களமிறங்காத பந்துவீச்சாளர் ஆல்ரவுண்டர் ஜெயந்த் யாதவை ரோகித் சர்மா வேகப்பந்து வீச்சாளராக இருந்த மெக்லகனுக்கு பதிலாக  எடுத்துள்ளார். இறுதிப்போட்டிக்கு செல்வது யார் என்பதில் கடுமையான போட்டி நிலவும் நிலையில் மழையும் வந்து விடுமோ என்ற அச்சத்தில் போட்டியானது தொடங்கியுள்ளது. அரைமணி நேரம் முன்னதாக 7.30 மணிக்கே ஆட்டம் தொடங்கியுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mi vs csk playoff match in chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->