“சீனியர்கள் இல்லாததால் இந்தியா தோற்றது என்பது தவறு; தோற்க வைத்ததை ஜீரணிக்க முடியல.. புஜாரா விளாசல் - Seithipunal
Seithipunal


கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் 30 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டது. 15 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா டெஸ்ட் ஒன்றை இழந்துள்ளது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக பேட்டிங் செய்ய மிகுந்த சவாலான கொல்கத்தா பிட்ச் செயல்பட்டது.

2024 நியூசிலாந்து தொடரில் தவறான பிட்ச் தேர்வு இந்தியாவை ஒய்ட்வாஸ் தோல்வி அடையச் செய்திருந்த நிலையில் மீண்டும் அதே போன்ற பிட்ச்சை உருவாக்கியதே ரசிகர்களை கோபப்பட வைத்தது. இதற்காக தாமே இப்படிப்பட்ட பிட்ச் வேண்டுமென கேட்டதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சுப்மன் கில் தலைமையில் புதிய இளம் அணி உருவாகி வருவதால் அனுபவமின்மையால்தான் தோல்வி என்று சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் இந்தக் கருத்தையே கடுமையாக எதிர்த்தார் புஜாரா.

ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய அவர்,
“இதை நான் ஏற்க முடியாது. இளம் அணி மாற்றம் நடக்கிறது என்பதற்காகத் தோல்வி கிடைத்தது என்று சொல்வது தவறு. இந்தியாவில் ஜெய்ஸ்வால், ராகுல், சுந்தர், கில் ஆகியோரின் ரெக்கார்டுகள் மிக வலுவானவை,” என்றார்.

மேலும்,“சரியான பிட்ச் அமைந்திருந்தால் இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். இப்படி சவாலான பிட்ச்சில் விளையாடும் போது ஹோம் அட்வாண்டேஜ் கிடைக்காது. எதிரணி நமக்கு சமமாகிவிடுகிறது,”
எனக் கூறி அணியின் பிட்ச் தேர்வை நேரடியாக சாடினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It wrong that India lost because there were no Chinese I canot digest what made us lose Pujara laments


கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?




Seithipunal
--> -->