இலங்கை அணிக்காக விளையாட செல்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர்! அதிர்ச்சி முடிவு!  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் இலங்கை நாட்டு அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். 

இந்தியாவின் ஐபிஎல் போலவே, இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் லங்கா பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி முதலாவது சீசன் வருகிற 28-ந் தேதி முதல் செப்டம்பர் 20-ந் தேதி வரை அந்த நாட்டில் நடக்க இருக்கிறது. 

இந்த தொடரில் இலங்கையின் முக்கிய நகரங்களான கொழும்பு, கண்டி, காலே, டம்புல்லா, ஜாப்னா ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்ட 5 அணிகள் கலந்து கொள்கின்றன. 

இந்த அணிகளில் இலங்கையை சேர்ந்த முன்னணி வீரர்களுடன், வெளிநாட்டு வீரர்களும் இடம் பெறுகிறார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த போட்டி தொடரில் இந்தியாவில் இருந்து முன்னாள் வீரர் இர்பான் பதான் விளையாட முடிவு செய்துள்ளார். 

இர்பான் பதான் கடந்த ஜனவரி மாதத்தில் கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் காத்திருந்த பதான் ஒய்வு அறிவிப்பை வெளியிட்டார். 

பொதுவாக இந்திய வீரர்கள் வெளிநாட்டில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாட அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி விளையாடினால் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் எந்த போட்டியிலும் இவர்கள் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

 நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் உள்பட 70 வெளிநாட்டு வீரர்கள் லங்கா பிரீமியர் லீக்கில் விளையாட விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Irfan Pathan decide to play Lankan premier league


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal