புதிய வரி விதிப்பு முறையில் திருப்பம்...! இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தற்காலிக நிறுத்தம்...! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் புதிய வரி விதிப்பு முறை அமலுக்கு வரும் வரை, அந்த நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நீண்டநாளாக நடைபெற்று வந்த வர்த்தக பேச்சுவார்த்தைகள் முக்கிய கட்டத்தை எட்டிய நிலையில், இந்தியாவுக்கு 18% வரி விதிக்க ஒப்புதல் எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

மார்ச் மாதத்திலேயே இந்த ஒப்பந்தம் உறுதியாகும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அதிர்ச்சியாக, உலக நாடுகளுக்கு ஒருதலைப்பட்சமாக விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் செல்லாது என நிராகரித்தது.

இந்த தீர்ப்புக்குப் பிறகு சில மணி நேரங்களிலேயே, வர்த்தக சட்டத்தின் 122வது பிரிவின் கீழ் 10% வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். பின்னர் அதை 15% ஆக உயர்த்தியும் நடவடிக்கை எடுத்தார்.

இருப்பினும், இந்த வரி விதிப்பு 150 நாட்கள் மட்டுமே அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தொடர்ச்சியான மாற்றங்களால் உருவான குழப்பநிலையை கருத்தில் கொண்டு, திட்டமிட்டபடி வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்காவில் புதிய வரி கட்டமைப்பு தெளிவாக அமலுக்கு வந்த பின்பே, இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று வர்த்தக துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Twist New Taxation Regime India US Trade Agreement Temporarily Suspended


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->