மத்திய கிழக்கில் போர் தீவிரம்: 4,335 விமானங்கள் ரத்து...! போக்​கு​வரத்து சேவை குறித்து ராம்​மோகன்​ நா​யுடு தெரிவித்ததென்ன...? - Seithipunal
Seithipunal


மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

அவர்,"அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழல் காரணமாக மத்திய கிழக்கு ஆசிய வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால், விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்பு கருதி வான்பரப்பு முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய விமான நிறுவனங்கள் 4,335 விமான சேவைகளையும், வெளிநாட்டு நிறுவனங்கள் 1,187 சேவைகளையும் ரத்து செய்துள்ளன.

இந்த இக்கட்டான சூழலிலும் சுமார் 2,19,780 பயணிகள் பயணம் செய்துள்ளனர். வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே வழக்கமான விமானப் போக்குவரத்து தொடங்கும் என்றும், அதுவரை சர்வதேச ஒழுங்குமுறை அமைப்புகளுடன் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபடும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

War Intensifies Middle East 4335 Flights Cancelled What Did Rammohan Naidu Say Regarding Transport Services


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->