ஐபிஎல் மினி ஏலம்! மினி லிஸ்டை வெளியிட்ட ஐபிஎல் நிர்வாகம்!  - Seithipunal
Seithipunal


2021 ஆம் ஆண்டு  ஐபிஎல் சீசனுக்கான ஏலமானது வருகின்ற 18ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்காக சுமார் 1114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அதில் தற்பொழுது 292 வீரர்களை மட்டும் தேர்வு செய்து 8 அணிகளும் அறிவித்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதில் இந்திய வீரர்கள் மொத்தம் 164 வீரர்களும் வெளிநாட்டு வீரர்கள் 125 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 61 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் 292 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கின்றனர். இதில் அதிகபட்சமாக அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு இந்திய வீரர்களான ஹர்பஜன் சிங் கேதார் ஜாதவ் அவர்களுடன் வெளிநாட்டு வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், சாம் பில்லிங்ஸ், மொயின் அலி, ஷாகிப் அல் ஹசன், ஜேசன் ராய், மார்க் வுட் ஏலம் தொடங்க இருக்கிறார்கள். 

அதேபோல் ஒன்றரை கோடி ரூபாய் அடிப்படை விலையில் 12 வீரர்களும் ஒரு கோடி ரூபாய் அடிப்படை விலையில்ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ் உள்ளிட்ட இந்திய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏலமானது வருகின்ற 18ம் தேதி மாலை 3 மணி அளவில் சென்னையில் நடைபெற இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL Season 2021 Announcement 11 Feb 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->