ஆவின் பச்சைப் பால் விலை உயர்வு உண்மையா...? அரசு வெளியிட்ட நேர்மையான விளக்கம்
Aavin green milk price hike true honest explanation released by government
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு பதிவு, ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்க வேண்டும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருமடங்கு (ரூ.6) விலை உயர்த்தியதாக கூறப்படுகிறது.
இதற்கான உண்மை நிலையை தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கியுள்ளது.அதில் குறிப்பிடப்பட்டிருப்பது,"கடந்த 2021-ம் ஆண்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது.

தற்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்திய “கிரீன் மேஜிக் பிளஸ்” என்கிற புதிய வகை பால் பாக்கெட், கூடுதலாக வைட்டமின் A மற்றும் D, கொழுப்புச் சத்து 4.5% மற்றும் மற்ற சத்துக்கள் 9% S.N.F. உயர்த்தியுள்ளதால், பழைய கிரீன் மேஜிக் பால் பாக்கெட் விலை மாற்றமின்றி கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
பழைய பால் பாக்கெட், கொழுப்புச் சத்து 4.5% மற்றும் S.N.F. 8.5% கொண்டது, உற்பத்தி நிறுத்தப்படாமலும், அதே விலையில் கிடைக்கின்றது.தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் உறுதி செய்துள்ளதாவது,“தவறான தகவலைப் பரப்பாதீர்கள்.
பால் விலை இருமடங்கு உயர்த்தப்படவில்லை, புதிய வகை பால் மட்டுமே சத்துவேறுபாடுகளுடன் விலை மாற்றம் பெற்றது”.
English Summary
Aavin green milk price hike true honest explanation released by government