ஐ.பி.எல். 2026: மும்பை இந்தியன்ஸில் இணைந்த ஷர்துல் தாக்கூர்!
IPL 2026 Shardul Thakur Mumbai Indians
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடரின் மினி ஏலத்திற்கு முன்னதாக, லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் பண வர்த்தகம் (All-cash Trade) மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பி.சி.சி.ஐ.) அடுத்த மாதம் அபுதாயில் மினி ஏலத்தை நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், அணிகள் வர்த்தகப் பரிமாற்றத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
மும்பையைச் சொந்த ஊராகக் கொண்ட ஷர்துல் தாக்கூர், ரூ.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். முன்பு, அர்ஜூன் டெண்டுல்கருக்கு மாற்றாக இவர் வர்த்தகம் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியான நிலையில், அர்ஜூன் மாற்றப்படாமலேயே ஷர்துல் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஷர்துல் தாக்கூர்:
கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் விற்பனையாகாமல் போன ஷர்துல் தாக்கூர், பின்னர் காயமடைந்த மோஷின் கானுக்குப் பதிலாக லக்னௌ அணியில் மாற்று வீரராக இணைந்தார்.
லக்னௌ அணிக்காக அவர் விளையாடிய 10 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வெல்லும் முக்கியப் பங்காற்றினார்.
ஒட்டுமொத்த ஐ.பி.எல். போட்டிகளில், அவர் 105 போட்டிகளில் விளையாடி 107 விக்கெட்டுகளையும், 325 ரன்களையும் குவித்துள்ளார்.
English Summary
IPL 2026 Shardul Thakur Mumbai Indians