#BigBreaking | இறுதி போட்டியில் ரெய்னா? சற்றுமுன் வெளியான சிஎஸ்கே வீரர்கள் பட்டியல்.!
ipl 2021 final csk player list
14வது ஐபிஎல் தொடரில் இன்று கோப்பைக்கான இறுதிப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் சரியாக இரவு ஏழு முப்பது மணி அளவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், சற்றுமுன் சுண்டப்பட்ட டாஸ்சில், கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை அணி முதலில் பேட் செய்ய களமிறங்க உள்ளது.
சென்னை அணி வீரர்கள் :
F du Plessis, R Gaikwad, M Ali, A Rayudu, R Uthappa, MS Dhoni, R Jadeja, DJ Bravo, S Thakur, D Chahar, J Hazlewood
(ரெய்னா இடம்பெறவில்லை)
கொல்கத்தா அணி வீரர்கள் :
S Gill, V Iyer, R Tripathi, N Rana, E Morgan, D Karthik, S Al Hasan, S Narine, L Ferguson, V Chakaravarthy, S Mavi
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை, ஐபிஎல் 12 தொடர்களில் விளையாடி உள்ளது. இதில், ஒன்பது முறை இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அதில், கடந்த 2010ஆம் ஆண்டு, 2011 ஆம் ஆண்டு, 2018 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
அதே சமயத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை, கடந்த 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இறுதி சுற்றுக்கு முன்னேறி, அந்த இரு முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும் கோப்பையை வெல்லும் போது, அந்த அணியின் கேப்டனாக இருந்தவர் கௌதம் கம்பீர் ஆவார்.
English Summary
ipl 2021 final csk player list