தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு கடும் எதிர்ப்பு; பாதியிலேயே பிரச்சாரத்தை முடித்த சென்றதால் பரபரப்பு..!
Sensation in Dharapuram as TVK candidate Sathyabhama faces stiff opposition and cuts her campaign short
தமிழகத்தில் 07 தொகுதிகள் காலியாகவுள்ள நிலையில், தற்போதைக்கு இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது
அதன்படி, வரும் அக்டோபர் 06-ஆம் தேதி தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளன. இந்நிலையில் தமிழக இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.
இந்த தொகுதியில், தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு பரப்புரையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் சத்தியபாமா பெரிய குமாரபாளையம் மற்றும் நல்லிபாளையம் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அதிமுகவில் போட்டி இட்டு, வெற்றிப்பெற்று , ஏன் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் வாக்கு கேட்க வந்தீர்கள் என்று பொதுமக்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது காவல்துறையினர் இடைமறித்துச் சூழலைக் கட்டுப்படுத்த முயன்றபோதிலும், எதிர்ப்பு நீடித்ததால் சத்தியபாமா தனது பரப்புரையை பாதியிலேயே கைவிட்டுத் திரும்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பொட்டிக்காம்பாளையம், தாசார்பட்டி பிரிவு, சித்தூர் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.
இதனிடையே, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் தாராபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றன. மேலும், இந்நிலையில், முதல்வர் ஜோசப் விஜய் வரும் 04-ஆம் தேதி தாராபுரம் தொகுதியில் சுமார் 114 கிலோ மீட்டர் தூரம் பயணித்துத் தவெக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
Sensation in Dharapuram as TVK candidate Sathyabhama faces stiff opposition and cuts her campaign short