சூரிய குடும்பத்திற்கு வெளியே ஒரு கிரகத்திலிருந்து வெளிப்படும் ரேடியோ அலைவரிசை சிக்னல்; ஏலியன்கள் வாழ்வதற்கான அறிகுறியா..? - Seithipunal
Seithipunal


ஹார்வர்ட் & ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையம் மற்றும் ஒரேகான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிப் குழுவினர் சூரிய குடும்பத்திற்கு வெளியே வெகு தொலைவில் உள்ள ஒரு கிரகத்திலிருந்து வெளிப்படும் ரேடியோ அலைவரிசை சிக்னல்களை விஞ்ஞானிகள் முதன்முறையாகத் துல்லியமாகக் கண்டறிந்துள்ளனர். 

பூமியிலிருந்து சுமார் 63 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள 'பீட்டா பிக்டோரிஸ் பி' என்ற வாயுக்களால் ஆன பிரம்மாண்ட புறக்கோளிலிருந்து (Exoplanet) இந்த ரேடியோ சிக்னல்கள் தொடர்ந்து வெளி வருவது விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். 

2008-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த கிரகம், வியாழன் கிரகத்தை விட 11.729 மடங்கு அதிக நிறையுடையது. இது தனது தாய் நட்சத்திரத்தைச் சுற்றி வர 23.6 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. கடந்த காலத்தில் இந்த நட்சத்திர மண்டலத்திலிருந்து ரேடியோ அலைகள் வருவதை வானியலாளர்கள் உணர்ந்திருந்தாலும், அது நட்சத்திரத்திலிருந்து வருகிறதா அல்லது அதைச் சுற்றி வரும் கிரகத்திலிருந்து வருகிறதா என்பதைத் துல்லியமாக வரையறுக்க முடியவில்லை.

இதற்காகத் தென்னாப்பிரிக்காவில் உள்ள மிக சக்திவாய்ந்த 'மீர்காட்' (MeerKAT) ரேடியோ தொலைநோக்கி வரிசையைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் பலமுறை ஆய்வு செய்தனர். அந்தவகையில், தொலைநோக்கியின் உயர் துல்லியத்தன்மை காரணமாக, தாய் நட்சத்திரத்தின் குறுக்கீடு இன்றி, நேரடியாக அந்த கிரகத்தின் இருப்பிடத்திலிருந்து மட்டுமே குறுகிய, தொடர்ச்சியான ரேடியோ அலைகள் வருவதை விஞ்ஞானிகளால் தனியாகப் பிரித்தறிய முடிந்தது.

பூமிக்கு வெளியே வேறு உலகில் உயிரினங்கள் (ஏலியன்கள்) வாழ்கிறதா என்ற ஆர்வத்தை இச்செய்தி தூண்டினாலும், இது ஏலியன்கள் அனுப்பிய சிக்னல் அல்ல என்பதை விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அத்துடன், பூமியில் வட மற்றும் தென் துருவங்களில் காணப்படும் 'அரோரா' (Auroras - துருவ ஒளி) நிகழ்வைப் போல, அந்த கிரகத்தில் மிகப்பிரமாண்ட அளவில் ஏற்படும் துருவ ஒளி நிகழ்வே இந்த ரேடியோ அலைகளுக்குக் காரணம் என ஹார்வர்ட் & ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையம் மற்றும் ஒரேகான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிப் குழுவினர் விளக்கமளித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is the radio signal emanating from a planet outside the solar system from aliens


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->