அக்டோபர் 10-ஆம் தேதி மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்க ராகுல் காந்தி சென்னை வருகிறார்; மாணிக்கம் தாகூர் எம்.பி...! - Seithipunal
Seithipunal


மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடுத்த மாதம் 10-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்க வரவுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர் இது குறித்து கூறியதாவது;

''நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களின் பிரச்சனைகளை கேட்டறியும் வகையில் 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சியை ராகுல் காந்தி நடத்தி வருவதாகக் கூறினார். அந்தவகையில் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி சென்னை தீவுத்திடலில் நடைபெறும் மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்க ராகுல் காந்தி சென்னை வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்க இருப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘மாணவர்களின் குரல்’ நாடு முழுவதும் தற்போதுவரை ஐந்து இடங்களில் நடத்தியிருக்கிறார். தற்போது ஆறாவது இடமாக தமிழ்நாடு வர இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், சென்னையில் நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்பார். இந்த நிகழ்ச்சியில் வினாத்தாள் கசிவு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசினார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 152 முக்கிய வினாத்தாள் கசிவு சம்பவங்கள் அரங்கேறி இருப்பதாக வும், இதனால் சுமார் ஏழரை கோடி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும் மாணிக்கம் தாகூர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MP Manickam Tagore states that Rahul Gandhi is visiting Chennai on October 10 to participate in the Voice of Students event


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->