மனிஷ் பாண்டே - விஜய் சங்கர் அதிரடியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி! - Seithipunal
Seithipunal


13 வது ஐபிஎல் தொடரின் இன்றைய 40-வது லீக் ஆட்டம் இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்கிய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர், பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்  செய்ய களமிறங்கியது.

ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ராபின் உத்தப்பா 13 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சஞ்சு சாம்சன் 26 பந்தில் 36 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து இருந்தது.

ஒன் டவுன் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் 32 பந்தில் 30 ரன்னும், பட்லர்9  ரன்னும், ஸ்மித்19  ரன்னும், ரியான் பராக் 20  ரன்னும் அடித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.

ஐதராபாத் அணியில் இன்று புதிதாக சேர்க்கப்பட்ட ஹோல்டர், தான் வீசிய 4 ஓவர்களில், 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.1 ஓவர்களில், 2 விக்கெட் இழப்புக்கு,  156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மனிஷ் பாண்டே 47 பந்துகளில், 82 ரன்களும், விஜய் சங்கர் 51 பந்துகளில், 52 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று ஆடி வெற்றிக்கு வழிவகுத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2020 match 40 srh vs rr result


கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
Seithipunal