டக் அவுட் ஆன குட்டி சிங்கம்! ஆட்டத்தில் 5 ஓவர் முடிவில்., சிஎஸ்கே vs டெல்லி கேபிட்டல்ஸ்! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் சீசன் தொடரின் இன்றைய 34 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல் அணியும் மோதுகின்றன. இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி (கேப்டன்), அம்பதி ராயுடு, ஃபாஃப் டு பிளெசிஸ், ஷேன் வாட்சன், கேதார் ஜாதவ், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, S குரான், தீபக் சஹார், தாஹிர், K ஷர்மா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

டெல்லி கேப்பிடல் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகர் தவான், பிருத்வி சாவ்,  ககிசோ ரபாடா, அஜிங்க்யா ரஹானே, அக்ஷர் படேல்,  அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), துஷார் தேஷ்பாண்டே ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

இந்நிலையில், டாஸ் வென்ற சென்னை சூப் கிங்க்ஸ் அணி  முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி குட்டி சிங்கம் சாம் குரான் 3 பந்துகள் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தற்போது வரை சென்னை அணி,  5.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு, 34  ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. காலத்தில் தற்போது ஃபாஃப் டு பிளெசிஸ், ஷேன் வாட்சன் ஆடி வருகின்றனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2020 MATCH 34 CSK VS DC TOSS


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal