காசா சமாதானம் அரசியல் சண்டையாக மாறியது! - மேக்ரானுக்கு டிரம்ப் 200% வரி எச்சரிக்கை...!
Gaza peace initiative turned political fight Trump warns Macron 200percentage tariff threat
அமெரிக்காவின் நடுவண் முயற்சியால் காசா (ஹமாஸ்) – இஸ்ரேல் இடையிலான நீண்ட போர் தற்காலிகமாக ஓய்ந்துள்ளது. முதல் கட்டமாக ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுதலை செய்த நிலையில், பதிலடியாக இஸ்ரேல் தங்கள் சிறைகளில் இருந்த பாலஸ்தீன கைதிகளை வெளியே அனுப்பியது.
இப்போது இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டி குழுவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமைத்துள்ளார்.

இந்த “காசா அமைதி வாரியத்தில்” இணைய துருக்கி, இத்தாலி, கனடா, ஆஸ்திரேலியா,மொராக்கோ, இங்கிலாந்து, எகிப்து, அர்ஜென்டினா, இந்தோனேசியா, ஜெர்மனி உள்ளிட்ட சுமார் 60 நாடுகளின் தலைவர்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில், அந்த வாரியத்தில் சேருவதற்கான டிரம்பின் அழைப்பை பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மேக்ரான் நிராகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு கடும் பதிலடி கொடுத்த டிரம்ப், “பிரான்ஸ் இந்த அமைதி வாரியத்தில் இணைய மறுத்தால், அந்நாட்டு மதுபானங்கள் மீது 200 சதவீத வரி விதிப்பேன்” என்று வெளிப்படையாக மிரட்டியுள்ளார்.
மேலும், “பிரான்ஸ் தயாரிப்பு மது பானங்களுக்கு 200% வரி விதித்தால், அதிபர் மேக்ரான் உடனே என் வாரியத்தில் சேர்ந்துவிடுவார்” என டிரம்ப் நகைச்சுவை கலந்த அரசியல் தாக்குதலையும் நடத்தியுள்ளார்.
English Summary
Gaza peace initiative turned political fight Trump warns Macron 200percentage tariff threat