#WorldCup2023 || மறக்க முடியாத இறுதிப்போட்டி.. அதே மைதானத்தில் மீண்டும் மோதல்.. பழி தீர்க்கமா இலங்கை அணி..!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி 1983ம் ஆண்டுக்கு உலக கோப்பை வென்ற பிறகு 28 ஆண்டுகள் கழித்து கடந்த 2011 இந்திய அணி சொந்த மண்ணில் உலக கோப்பையை வென்று அசத்தியது. இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ரசிகர்களின் 28 ஆண்டுகால தவிப்பை கலைந்து எதிர்பார்ப்பை நிறைவேற்றியது தோனி தலைமையிலான இந்திய அணி.

1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்ற பிறகு 2011ல் தோனி தலைமையிலான இந்திய அணி ரிக்கி பாண்டிங் தலைமையிலான வலுவான ஆஸ்திரேலிய அணியை காலிறுதியிலும், பாகிஸ்தான் அணியை அரையிறுதியிலும் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த இறுதி போட்டியானது மும்பையில் அமைந்துள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை 2வது முறையாக கைப்பற்றியது. இதற்கிடையே இந்தியாவில் மீண்டும் 13வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஒரு நாள் போட்டியில் உலக தரவரிசை பட்டியலில் முதல் 8 இடம் பெற்ற அணிகள் நேரடியாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள நிலையில் மீதமுள்ள 2 இடத்தை பிடிக்கும் அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. 

இன்று நடைபெற்ற உலகக் கோப்பை காண தகுதி சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவில் நடைபெறும் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. 

இந்தியாவில் நடைபெறும் 13வது உலக கோப்பை தொடரில் இலங்கை அணி இந்திய அணி உடனான தனது லீக் போட்டியில் 2011ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த அதே மும்பை வான்கடே மைதானத்தில் வரும் நவம்பர் 2ம் தேதி மீண்டும் எதிர்கொள்கிறது.

இந்த லீக் போட்டியானது 2011ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டி போன்றே பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை இலங்கை அணி பழி தீர்க்குமா? அல்லது இந்திய அணி தனது வெற்றியை மீண்டும் நிலைநாட்டுமா? என்பதை என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IndvsSL match at Wankhede Stadium like 2011 final


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->