INDvsAUS: இதற்காக தான் காத்திருந்தேன்... சாதனை படைத்த அபிஷேக் ஷர்மா...!
INDvsAUS Abhishek Sharma T20 series
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடர் மழையால் முடிவின்றி முடிவடைந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா, 163 ரன்கள் குவித்து தொடரின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விருதைப் பெற்ற பின் அபிஷேக் சர்மா கூறியதாவது: “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்காக நான் நீண்ட நாட்களாக காத்திருந்தேன். அணி தேர்வு அறிவிக்கப்பட்ட உடனே பெரும் உற்சாகம் ஏற்பட்டது. ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பேட்டிங் செய்ய சிறந்தவை என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். அங்குள்ள வேகமான பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் சவால் எனக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது.”
அவர் மேலும் கூறினார்: “அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டுமெனில், உலகத் தரத்திலான பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் திறன் அவசியம். அதற்காகவே நான் அதிகம் பயிற்சி செய்தேன். ஆஸ்திரேலிய வீரர்களின் வேகப் பந்துகளை சமாளிப்பது சிரமமானதாய் இருந்தாலும், அதுவே என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்தும் வாய்ப்பாக அமைந்தது.”
அபிஷேக் சர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு நன்றி தெரிவித்தார். “அவர்கள் என்மீது முழு நம்பிக்கை வைத்தனர். எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை அளித்தனர். அதனால் தான் நான் தைரியமாக விளையாட முடிந்தது,” என்றார்.
இறுதியாக, டி20 உலகக் கோப்பை குறித்து அவர் கூறினார்: “இந்திய அணிக்காக உலகக் கோப்பையில் விளையாடுவது எனது கனவு. நாட்டிற்காக வெற்றி பெறுவது எனது மிகப்பெரிய குறிக்கோள். அந்த வாய்ப்பு கிடைத்தால் அதை முழுமையாக பயன்படுத்துவேன்,” என்றார்.
English Summary
INDvsAUS Abhishek Sharma T20 series