இந்திய அணியில் சூர்யகுமார், இஷான் கிஷன், அணிக்கு திரும்பிய நடராஜன்! ஒரே அணியில் 3 தமிழக வீரர்கள்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவு செய்தவுடன், ஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் போட்டித் தொடரில் விளையாட இருக்கிறது. 

இந்த போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் புஅறிமுக  வீரர்களாக ஐபிஎல் போட்டிகளில் அசத்திய சூர்யகுமார் யாதவ் இஷன் கிஷன், ராகுல் திவேதியா அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா. ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

காயத்தில் இருந்து மீண்ட புவனேஸ்வர்குமார், வருண் சக்கரவர்த்தி ( இன்னும் அறிமுகமாகிவில்லை) அணிக்குத் திரும்பியுள்ளார்கள். தமிழக வீரர் நடராஜன், வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூன்று வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் இடம் பிடித்திருந்த சஞ்சு சாம்சன் சொதப்பியதால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் மணிஷ் பாண்டே அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு இருக்கிறார்.  18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் 20 ஓவர் போட்டிக்கு விக்கெட் கீப்பராக ரிஷப் பாண்ட் திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அணி : விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா , கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், ஹார்டிக், ரிஷாப் பந்த், இஷான் கிஷன், ஒய் சாஹல், வருண் சக்ரவர்த்தி, ஆக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தேவதியா, டி நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் சைனி, ஷார்துல் தாக்கூர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India’s squad for Paytm T20I series against England announced.


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->