“முதல் பதக்கம் வென்ற இந்தியா!”: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஏர் ரைபிள் அணி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை! - Seithipunal
Seithipunal



2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தனது முதல் பதக்கத்தைக் கைப்பற்றிப் பதக்கப் பட்டியலில் கணக்கைத் தொடங்கியுள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழுப் பிரிவில் (Women's 10m Air Rifle Team Event) இந்திய அணி அபாரமாகச் செயல்பட்டு வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

இப்போட்டியில் இந்திய அணிக்காகக் களமிறங்கிய தமிழ்நாடு வீராங்கனை இளவேனில் வாலரிவன், சோனம் உத்தம் மஸ்கர் மற்றும் விதர்சா ஆகியோர் அடங்கிய குழு, சிறப்பான திறனை வெளிப்படுத்தி இந்த வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்கத்திலேயே மகளிர் துப்பாக்கி சுடுதல் அணி வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கைத் தொடங்கியிருப்பது, போட்டியில் பங்கேற்றுள்ள பிற இந்திய வீரர் வீராங்கனைகளுக்கும் இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கும் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India Opens Medal Tally with Silver in Women 10m Air Rifle Team Event at Asian Games 2026


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->