#INDvsSA || இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை கதிகளங்கவைத்த தென் ஆப்பிரிக்க அணி.! வெற்றி இலக்கு நிர்ணயம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி, இந்தியாவுடன் 5 டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இதில், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இன்று இந்த இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது 20 ஓவர் ஆட்டம் ஒடிசா மாநிலம், கட்டாக்கில் உள்ள மைதானத்தில் நடந்து வருகிறது.

இதில், டாஸ் தென்னாபிரிக்க அணி, முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்யதது. 

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ருத்ராஜ் 4 பந்துகளை சந்தித்து ஒரு ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி கொடுத்தார். அதனை தொடர்ந்து இஷான் கிஷன் உடன் கைகோர்த்த ஸ்ரேயாஸ் ஐயர் ரன்குவிப்பில் ஈடுபட்டார்.

21 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 34 ரன்கள் சேர்த்து இஷான் கிஷன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதன்பின், இந்திய அணியின் கேப்டன், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 5 ரன்களுக்கும், அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா ௯ ரன்களுக்கும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

தட்டுத்தடுமாறி விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்க உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs SA T20 Cricket Match 1st Half june 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->