அரங்கத்தை அதிரவைத்த ரோஹித் சர்மா.! கொண்டாட்டத்தில் துள்ளிக்குதித்த ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணியானது ஆரோன் பிஞ்ச் தலைமையில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விலடவுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெற்றது.. இந்திய அணி விராட்கோலியன் தலைமையில் இம்மாதத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 2 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் 2 - 1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியது. 

இந்த நம்பிக்கையுடன் இந்திய அணி போட்டியில் களமிறங்கியுள்ள நிலையில், இறுதியில் பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. கடந்த போட்டியில் இந்திய அணியின் சார்பாக ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ரிசப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது சாமி, பும்ரா ஆகியோரும் விளையாடினர்..

ஆஸ்திரேலிய அணியின் சார்பாக டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், மரன்ஸ் லபுஸ்சாக்னே, ஸ்டீவன் ஸ்மித், அஷ்டின் டர்னர், அலெக்ஸ் காரே, அஸ்டோன் அகர், பட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா ஆகியோர் விளையாடுகின்றனர். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியானது பந்துவீச்சினை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டுகளை கூட இழக்காமல், 258 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இந்த நிலையில், முன்னதாக ராஜ்கோட் நகரில் உள்ள சவுராஷ்டிரா மைதானத்தில் நடைபெற்ற, வழக்கம்போல டாஸை வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. பேட்டிங் செய்ய தயாரான இந்திய அணியின் சார்பாக 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் எடுத்துள்ளது. 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை துவக்ககியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி, இறுதியில் 304 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி ஆலவுட் ஆகியது. இறுதியாக இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. 

இந்த நிலையில், இன்றைய 3 ஆவது ஒருநாள் தொடர் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியின் துவக்கத்தில் டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்றுள்ள நிலையில், இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

இந்த போட்டியில் துவக்க ஜோடியாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் 132 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து விளாசியிருந்தார். களத்தில் இருந்த மரன்ஸ் லபுஸ்சாக்னே மற்றும் அலெக்ஸ் காரே சிறிது நேரம் நின்று விளையாடினர். இந்த ஆட்டத்தின் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்துள்ளது. 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வந்தது. 

துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா - லோகேஷ் ராகுல் ஜோடியில், லோகேஷ் ராகுல் 27 பந்துகளில் 19 ரன்கள் அடித்து 12.3 ஓவரில் ஆட்டமிழந்தார். இவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி - ரோகித் சர்மா கூட்டணி சேர்த்து விளையாடி வரும் நிலையில், துவக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 110 பந்துகளில் 100 ரன்கள் அடித்துள்ளார். `இதில் 8 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs aus match 3 rd odi rohit hits century


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal