கேஸ் அடுப்பில் குளிக்க வெந்நீர் வைத்ததை கண்டித்த கணவர்; மகனை கொன்று தற்கொலை செய்த கொண்ட இளம்பெண்; 2 வயது குழந்தை ஆபத்தான நிலையில்..! - Seithipunal
Seithipunal


திருமண நாளில் கணவன் வெளியே அழைத்துச் செல்ல மறுத்த கோபத்தில் இளம்பெண், குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் போரபண்டா பகுதியைச் சேர்ந்தவர் முரளி வேணு.மின் துறையில் லைன்மேன் வேலை சித்து வருகிறார். மின்துறையில் பணியாற்றியவர். இவருக்கு சத்தியவதி என்பவருடன் திருமணமாகி ஐந்து வயது மகன் மற்றும்  இரண்டு வயதில் மகள் இருந்தனர். 

இவருக்கு அடிக்கடி கோபம் வரும் என்பதால் வீட்டில் சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் சண்டை ஏற்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் எரிபொரு தட்டுப்பாடு சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், குளிப்பதற்காக கேஸ் அடுப்பில் சத்தியவதி வெந்நீர் வைத்துள்ளார். அதைப் பார்த்த கணவர் முரளி வேணு கடும் கோபம் அடைந்து, சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் ஏன் கேஸ் அடுப்பில் வெந்நீர் வைக்கிறாய்? என்று மனைவியை திட்டியுள்ளார்.

ஆனால், அன்றைய தினம் திருமண நாள் என்பதால் கணவனுடன் பதிலுக்கு பதில் சண்டை போடுவதை சத்தியவதி தவிர்த்துள்ளார். அதற்கு மாறாக, இன்று தமது திருமண நாள் என்பதால், குழந்தைகளுடன் ஜாலியாக எங்கேயாவது வெளியே சென்றுவரலாம் என கேட்டுள்ளார். அதற்கு அவர் தனக்கு வேலை இருக்கிறது, நீ வேண்டுமானால் போயிட்டு வா என்று கூறியுள்ளார்.

அத்துடன், முரளி வேணு அன்றைய தினம், தனது தந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அவர் வீடு திரும்பியதும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தந்தையை அழைத்துச் செல்லும் உங்களுக்கு, குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல முடியாதா? என்று மனைவியும் சண்டை போட்டுள்ளார்.

அதையும் கணவன் அலட்சியம் செய்த நிலையில், அந்த இளம்பெண் விபரீத முடிவு எடுத்துள்ளார். தனது இரு குழந்தைகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது, 02 குழந்தைகளும் மூச்சுப் பேச்சின்றி கிடந்ததை அறிந்ததும் சத்தியவதி, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சத்தியவதி உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இரு குழந்தைகளையும் மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு 05 வயது சிறுவன் ருத்ரன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இரண்டு வயது பெண் குழந்தை தன்விகா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முரளி வேணுவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். கணவன் - மனைவி சண்டையில்தான் இளம்பெண், தனது மகனை கொலை செய்துவிட்டு விபரீத முடிவு எடுத்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young Woman Kills Son and Commits Suicide After Husband Reprimands Her for Heating Bathwater on Gas Stove


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->