ஐசிசி விருதுகளை தட்டி தூக்கிய இந்திய இளம் வீரர்! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒவ்வொரு மாதமும் சிறந்த ஆண் மற்றும் பெண் வீரர்களை தேர்வு செய்து பாராட்டி வருகிறது. அந்த வகையில், 2024 செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த ஆண் வீரராக இந்தியாவின் அதிரடி இளம் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா தேர்வாகியுள்ளார்.

அபிஷேக், ஆசிய கோப்பை தொடரில் தன் தாக்குதல்மிகு ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். மொத்தம் 7 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களுடன் 314 ரன்கள் குவித்து, தொடரின் அதிக ரன்கள் பெற்ற வீரராக விளங்கினார். அவரது நிலையான ஆட்டநடை மற்றும் தொடக்க ஆட்டங்களில் களத்தை கட்டுப்படுத்தும் திறமை காரணமாக, ஆசிய கோப்பை “தொடர் நாயகன்” விருதையும் பெற்றார்.

அதேபோல், மகளிர் பிரிவில் செப்டம்பர் மாத சிறந்த வீராங்கனையாக இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்மிருதி மந்தனா தேர்வாகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், மந்தனா சிறப்பாக விளையாடி தொடரின் நாயகி விருதையும் கைப்பற்றினார்.

அந்த தொடரில் மந்தனா 3 போட்டிகளில் 1 சதத்துடன் மொத்தம் 308 ரன்கள் குவித்தார். தன்னுடைய துல்லியமான ஸ்ட்ரோக் பிளே, ஆட்டத்தில் நிலைத்தன்மை மற்றும் அனுபவம் நிறைந்த செயல்திறன் ஆகியவை அவரை செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீராங்கனையாக உயர்த்தியது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ICC Abhishek Sharma Smriti Mandhana 


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->