T20 World Cup : இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து: 'வில் ஜாக்ஸ்' அதிரடியில் சுருண்ட இலங்கை!
England Crushes Sri Lanka A Bowling Masterclass in Pallekele
பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையைத் துவம்சம் செய்தது.
சால்ட்டின் தனிநபர் போராட்டம்:
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஷானகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து பேட்டர்கள் வரிசையாகச் சொதப்ப, பில் சால்ட் மட்டும் தனி ஆளாகப் போராடி 40 பந்துகளில் 62 ரன்கள் (6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) குவித்தார். ஜேமி ஓவர்டான் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் விளைவாக 20 ஓவர்களில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. இலங்கையின் துனித் வெல்லாலகே மற்றும் தில்ஷன் மதுஷங்கா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இலங்கையின் பேட்டிங் சரிவு:
147 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடிய இலங்கை, இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சைத் தாள முடியாமல் 16.4 ஓவர்களில் வெறும் 95 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்ச ரன்: கேப்டன் தாசுன் ஷானகா 30 ரன்கள் எடுத்தார்.
பந்துவீச்சு நாயகர்கள்: இங்கிலாந்து தரப்பில் வில் ஜாக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் டாஸன் மற்றும் அடில் ரஷீத் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தனர்.
ஆட்ட நாயகன்: பேட்டிங்கில் 21 ரன்கள் சேர்த்ததுடன், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளைச் சாய்த்து ஆல்-ரவுண்ட் திறமையை வெளிப்படுத்திய வில் ஜாக்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
English Summary
England Crushes Sri Lanka A Bowling Masterclass in Pallekele