சுரேஷ் ரெய்னாவுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை...! சட்ட விரோத சூதாட்ட செயலியில் நடித்த வழக்கு...! - Seithipunal
Seithipunal


அமலாக்கதுறை, சட்டவிரோத சூதாட்ட செயலி குறித்த பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்து  நடிகர்கள் விஜய் தேவரகொண்டா,பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி மற்றும் பலர் மீது விசாரணை நடத்த சம்மன் அனுப்பியது.

இந்த சட்டவிரோத சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா? மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா? என்ற கோணத்தில் அமலாக்கத்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில்,இன்று இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு, ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இதில் இன்று நடைபெறும் விசாரணையில் சுரேஷ் ரெய்னாவிடம் வாக்குமூலம் பெற அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.அதிரடியாக விசாரணையில் இறங்கியுள்ள அமலாக்கத்துறை விரைவில் இதற்கு ஒரு தீர்வு தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Enforcement Directorate summons Suresh Raina Case acting illegal gambling app


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->