உலகக்கோப்பையில் விளையாடுவாரா? ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிய முன்னணி வீரர்! ரசிகர்கள் அதிர்ச்சி!  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி மற்றும் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தோள்பட்டைகாயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். ஸ்டெயினுக்கு தோள்பட்டை காயம் அதிக அளவில் இருப்பதால், அவர் உலகக் கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்காக களமிறங்குவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 

முதலில் பெங்களூர் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் நாதன் கவுல்டர் நீல் காயம் காரணாக விலகினார். அவருக்கு பதிலாக தான் தென் ஆப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெயின் அழைக்கப்பட்டார். இந்தியா வந்த  ஸ்டெயின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாடிய 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த இரண்டு போட்டிகளிலும் பெங்களூர் அணி வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஸ்டெயின் விலகல் குறித்து ஆர்சிபி அணியின் நிர்வாகி  சஞ்சீவ் சுரிவாலா  கூறிய போது, ஸ்டெயினுக்கு தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயத்தால் தொடர்ந்து பந்துவீச முடியாத நிலையில் உள்ளார். அவரின் உடல்நிலை கருதியும், எதிர்வரும் உலகக்கோப்பையை கவனத்தில் கொண்டும் அவரை அணியில் இருந்து விடுவிக்கிறோம். இந்த சீசனில் ஸ்டெயின் இனி விளையாடமாட்டார். பெங்களூர் அணிக்காக ஸ்டெயின் பங்கேற்ற 2 போட்டிகளில் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம், அவர் அணியில் இருந்தது பெருமையாக இருந்தது. அவர் விரைந்து குணமடைய வாழ்த்துக்கள்" என அவர் தெரிவித்துள்ளார். 

டேல் ஸ்டெய்ன் காயத்தால் தென்னாப்பிரிக்க ரசிகர்கள் வருந்துகிறார்களோ இல்லையோ, அவருடைய வருகைக்கு பின்னர் வெற்றி பெற ஆரம்பித்த பெங்களூர் அணியின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dale steyn ruled out of IPL2019


கருத்துக் கணிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற போவது யார்?
கருத்துக் கணிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற போவது யார்?
Seithipunal