ரூ.40 கோடி ஆஃபருக்கும் ‘no’! “என் குழந்தைகளுக்கு களங்கம் வேண்டாம்” – சுனில் ஷெட்டியின் உறுதியான முடிவு
no 40 crore offer I dont want any stain my childrens reputation Sunil Shetty firm decision
புகையிலை மற்றும் பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க ரூ.40 கோடி வழங்கத் தயாராக இருப்பதாக வந்த ஆஃபரையே துணிச்சலாக மறுத்ததாக நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
பணத்தை விட நேர்மையும் குடும்ப மதிப்புகளுமே முக்கியம் என அவர் அழுத்தமாக கூறியுள்ளார்.பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுனில் ஷெட்டி, தமிழில் ரஜினிகாந்தின் ‘தர்பார்’, ‘12 பி’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்.

சமீபத்திய பேட்டியில் அவர் பகிர்ந்த அனுபவம், ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.அந்த பேட்டியில் அவர் தெரிவிக்கையில்,“ஒரு புகையிலை விளம்பரத்தில் நடிக்க ரூ.40 கோடி தருவதாக சொன்னார்கள்.
பணத்தை காட்டினால் நான் தடுமாறிவிடுவேன் என்று நினைத்தார்களா என்று நான் கேட்டேன். அந்த பணம் தேவையில்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் அதற்காக என் கொள்கைகளை விற்றுவிட மாட்டேன்” என்றார்.
மேலும்,“என் மகன், மகளின் கண்களில் நான் எப்படி தெரிக வேண்டும் என்பதே எனக்கு முக்கியம். அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் எந்த விஷயத்திலும் நான் ஈடுபட மாட்டேன்.
அதற்குப் பிறகு, அப்படிப்பட்ட விளம்பரங்களுக்காக என்னை அணுகவே யாரும் முயற்சிக்கவில்லை” என மனம் திறந்து தெரிவித்தார் சுனில் ஷெட்டி.
கோடிகள் தரும் ஆஃபரை நிராகரித்தும், தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்ற நடிகரின் இந்த முடிவு, பணம் அல்ல… கொள்கையே வாழ்க்கை என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.
English Summary
no 40 crore offer I dont want any stain my childrens reputation Sunil Shetty firm decision