வீரர்களை மாற்றினாலும் விதி மாறலையே! மூனே ஓவரில் காலியான சென்னை சூப்பர் கிங்ஸ்!  - Seithipunal
Seithipunal


ஷார்ஜாவில் நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் அணி - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடையேயான ஆட்டத்தில் சென்னை அணிக்கு அதிர்ச்சி துவக்கம் கிடைத்துள்ளது. 

இந்த தொடரில் இதுவரை 10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்று சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மீதமுள்ள நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

 

மும்பை அணி  7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அதே சமயம் இரு அணிகள் மோதிய முந்தய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றிபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை அணியின் வழக்கமான கேப்டன் ரோஹித் விளையாடாத நிலையில் பொல்லார்ட் அந்த அணியின் கேப்டனாக களமிறங்கியுள்ளார். சென்னை அணியில் அதிரடியாக மூன்று மாற்றங்களை செய்துள்ளனர். ஜாதவ், சாவ்லா, வாட்சன் நீக்கப்பட்டு, ஜெகதீசன், ருதுராஜ், தாஹிர் களமிறங்கினர். 

வீரர்களை மாற்றினாலும் சென்னை அணியின் விதி மாறவில்லை. முதல் ஓவரில் ருதுராஜ் டக் அவுட் ஆக, அடுத்த ஓவரில் ராயுடு 2 ரன்களிலும், ஜெகதீசன் ரன் எதுவும் இல்லாமலும் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரில் டூ பிளசியும் 1 ரன்களில் ஆட்டமிழந்தார். சென்னை அணி 3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 3 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. போல்ட், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CSK top order back to pavilion with in 3 overs


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal