காவல்துறை தலைமை அலுவலகத்தில் தமன்னா, விராட் கோலி மீது புகார்.! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் விளையாட்டுகளால் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். படிப்பில் கவனமின்மை, விளம்பரங்களுக்கு பலியாகி பணத்தை இழப்பது மற்றும் விளையாட முடியாத காரணத்தால் தற்கொலை செய்து கொள்வது என்று பல்வேறு கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன. 

இந்த நிலையில் நடிகை தமன்னா மற்றும் விளையாட்டு வீரர் விராட் கோலி மீது ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்ததற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

லாட்டரி சீட்டுகள் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இளைஞர்களை குறிவைத்து சில நிறுவனங்கள் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை இணையத்தில் பரப்பி வருகின்றனர். இதில் விளையாடும் பல இளைஞர்கள் தங்களுடைய பணத்தை இழக்கின்றனர். சமீபத்தில் ஒரு கல்லூரி மாணவர் கூட உயிரிழந்தார். 

மேலும், நேற்று பிரபல நடிகர் ஷாம் பணம் வைத்து வீட்டில் சூதாடிய காரணத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் வெளிவந்தார். இந்நிலையில், பிரபல நடிகையான தமன்னா மற்றும் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி மீது ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்த காரணத்தால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

complaints against thamanna and virot kholi 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->