ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி- தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கம் வென்று சாதனை!
Asian Athletics Championship Indian team wins gold in relay race
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று நடைபெற்ற கலப்பு தொடர் ஓட்டம் பிரிவு ஆட்டத்தில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த ராஜேஷ், சுபா இருவர் உள்ளனர். இன்று நடைபெற்ற 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த சந்தோஷ் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.
ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் பதக்கம் வெல்வது என்பது இதுவே முதன்முறையாகும். 400 மீட்டர் பந்தய தூரத்தை 49:40 வினாடிகளில் கடந்து சந்தோஷ் மூன்றாம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். அதன் பிறகு நடைபெற்ற கலப்பு 4*400 தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இந்திய அணி பந்தய தூரத்தை மொத்தம் 3 நிமிடம் 14:79 வினாடிகளில் கடந்து தங்க பதக்கத்தை தட்டிச் சென்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் இலங்கை அணி 2 ஆம் இடத்தை பிடித்துள்ளது.
English Summary
Asian Athletics Championship Indian team wins gold in relay race