ஐபிஎல் தொடர்களில் 6000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியல்.. யார் யார் தெரியுமா.?
6000 runs in IPL players list
இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. அதன்படி கடந்த 2008 ஆம் ஆண்டு பிசிசிஐ தொடங்கிய ஐபிஎல் டி20 தொடர் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது 16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் அனைத்து சீசன்களிலும் ஒரு சில வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் 6000 ரன்களைக் கடந்த வீரர்களின் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தான் முதல் வீரராக 6000 ரன்களை தொட்டார். அதனைத் தொடர்ந்து ஷிகர் தவான் மற்றும் டேவிட் வார்னர் இந்த மைல் கல்லை தொட்டனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்
விராட் கோலி (RCB) - 226 போட்டிகள் - 6844 ரன்கள்
ஷிகர் தவான் (PBKS) - 210 போட்டிகள் - 6477 ரன்கள்
டேவிட் வார்னர் (DC) - 167 போட்டிகள் - 6109 ரன்கள்
ரோகித் சர்மா (MI) - 232 போட்டிகள் - 6014 ரன்கள்
English Summary
6000 runs in IPL players list