இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான 02-வது டி20 போட்டி; சென்னை மெட்ரோ ரெயிலில் ரசிகர்களுக்கு இலவசம்..!
02nd T20 match between India and England
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறுகிறது. 02 வது டி20 போட்டி ஜனவரி 25 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இரு அணிகளும், 05 டி20 போட்டி மற்றும் 03 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் வரும் 25ம் தேதி நடக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 02 வது டி20 போட்டியைக் காண வரும் ரசிகர்கள் மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், அன்றைய நாளில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் போட்டிக்கான டிக்கெட்டை மட்டும் காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
English Summary
02nd T20 match between India and England