ஹேரம்ப கணபதி வழிபாடு... கடன் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்
Worship of Heramba Ganapathi will provide good solution debt problem
சங்கடங்களை தீர்க்கக் கூடிய நாளாக தான் சங்கடஹர சதுர்த்தி திகழ்கிறது. முக்கியமாக செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கவல்ல சதுர்த்தியாக தெரிவிக்கப்படுகிறது.ஒருமுறை வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி.

விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்றாக திகழ்பவர் தான் ஹேரம்ப கணபதி. இவர் 5 தலைகளையும், 10 கைகளையும் கொண்டவர். “ஹேரம்ப” என்ற சமஸ்கிருத சொல்லுக்கு “உதவியற்றவர்களைக் காப்பவர்” என்று பொருள்.மேலும், விநாயகரின் 5 முகங்கள் 5 திசைகளைக் குறிக்கின்றன, அவை மறைத்தல், அருளல்,படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய ஐந்தொழில்களைக் குறிக்கின்றன. இதில் 10 கைகள் 10 வகையான ஆயுதங்களையும், ஆசீர்வாதங்களையும் தாங்கியுள்ளன.
மந்திரம்
” ஓம் ஸ்ரீம் க்லீம் ஹேரம்ப கணபதியே ஸ்வாகா “
ஹேரம்ப கணபதியை வழிபடுவதால்:
தொழில் தடைகள், மனக்குழப்பம், எதிர்மறை எண்ணங்கள் விலகி நன்மை உண்டாகும். சகல தோஷங்களும் நீங்கும்.துன்பங்கள் நீங்கி, எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.ஆகையால்,இந்த வடிவத்தை வழிபடுவதன் மூலம் பல நன்மைகளை அடையலாம். காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு இதற்கான மந்திரத்தை தெரிவிக்கலாம். இந்த மந்திரத்தை பூஜை அறையில் அமர்ந்து தான் கூற வேண்டும் என்று இல்லை. வீட்டில் அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டும் கூறலாம். அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்தில் அமர்ந்தும் இந்த மந்திரத்தை கூறலாம். இந்த மந்திரத்தை கூறுவதற்கு எந்த வித தடைகளும் கட்டுப்பாடுகளும் கிடையாது. இருப்பினும் சுத்தமாக இருந்து இந்த மந்திரத்தை கூறும் பொழுது இந்த மந்திரத்திற்கு உரிய சக்தியால் அனைத்து விதமான நன்மைகளையும் நம்மால் பெற முடியும்.
English Summary
Worship of Heramba Ganapathi will provide good solution debt problem